கலைகளுக்கான பெண்களின் தேசிய அருங்காட்சியகம்
அமெரிக்கத் தலைநகரமான வாசிங்டனில் அமைந்துள்ள அருங்காட்சியம்கலைகளுக்கான பெண்களின் தேசிய அருங்காட்சியகம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமான வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ள ஓர் தேசிய அருங்காட்சியகம் ஆகும். கலைகள் மூலம் பெண்களை வெற்றிபெற அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் அருங்காட்சியகமாகும். 1981 ஆம் ஆண்டில் வாலஸ் மற்றும் வில்ஹெல்மினா ஹால்டே ஆகியோரால் தொடங்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டதிலிருந்து, இந்த அருங்காட்சியகம் 16 ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை 1,000 க்கும் மேற்பட்ட கலைஞர்களின் 6,000 க்கும் மேற்பட்ட படைப்புகளின் தொகுப்பைப் பெற்றுள்ளது. இந்த தொகுப்பில் மேரி கசாட், அல்மா வூட்ஸி தாமஸ், எலிசபெத் லூயிஸ் விஜி-லெப்ரன் மற்றும் ஆமி ஷெரால்ட் ஆகியோரின் படைப்புகளும் அடங்கும். மெக்சிகோ நாட்டு பெண் ஓவியர் பிரிடா காலோ வரைந்த போல்ஷெவிக் புரட்சியாளரும் மார்க்சிசக் கொள்கையாளருமான லியோன் திரொட்ஸ்கியின் ஓவியத்தை இங்கு காணலாம்.



